Sunday, September 23, 2007

360. விரும்பத் தக்கவரா இராமர் ?

ராமர் இஞ்சினியரிங் படித்திராவிட்டாலும், அவர் ராமர் சேது கட்டியிருக்காவிட்டாலும், அவர் சோமபானம் அருந்தியிருந்தாலும் (அவர் அருந்தவில்லை என்பது வேறு விஷயம்! சுக்ரீவன் அடிக்கடி சோமபானம் அருந்தி வந்ததை அவர் கடிந்திருக்கிறார் என்று தான் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது!) அவரை விரும்புவதற்கு பல காரணங்கள் உள்ளன அல்லவா ?

1. இராமர் ஏகபத்தினி விரதர்!

2. தந்தை தந்த வரத்திற்காக, விருப்பத்துடன் மணிமுடியைத் துறந்து வனவாழ்வை மேற்கொண்டவர், அதாவது 'நாற்காலி' ஆசை துளியும் அற்றவர்!

3. சாமானியர்கள் (குகன், சபரி, அகலிகை, சுக்ரீவன் ...) பேரில் உண்மையான அன்பும், அக்கறையும் கொண்ட மாமனிதர்.

4. தனக்காக உயிரையும் தரவல்ல நட்பையும், சுற்றத்தையும் (ஜடாயு, அனுமன், இலக்குவன், பரதன் ...) தனது மேன்மையால் கிடைக்கப் பெற்றவர்.

5. (கொழுக்கட்டையோ கூழோ என்ற பேதம் பார்க்காமல்) குகன் தந்த மீனையும், தேனையும் ஒன்றாக பாவித்து ஏற்றுக் கொண்டவர்!

6. தன் மனைவியை அபகரித்த எதிரி போர்க்களத்தில் நிராயுதபாணியாக நிற்கையில், "இன்று போய் நாளை வா" என்று பெருந்தன்மையோடு கூறிய நல்ல மனிதர்.

7. லவன், குசன் என்ற உலகம் வியந்த மைந்தர்களின் தந்தை!

8. வெற்றுப்பேச்சு பேசி பொழுதைக் கழிக்காமல், தன் செயல்களால் (ராம ராஜ்யம் அமைத்து!) தன் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு வித்திட்டவர்.

9. தன் குடும்பத்தினரையும், பொதுமக்களையும் ஒன்று போல் பாவித்தவர்!

10. பொய்யுரைக்காதவர், சந்தர்ப்பவாதம் அறியாதவர். நேர்மையாளராக வாழ்ந்து இன்றும் மக்களின் மனதில் அவதார நாயகனாக வாழ்பவர்!

11. தன்னை வெறுத்த சிற்றன்னை மீதும் அன்பு செலுத்தி, அரவணைத்துக் கொண்டவர்.

இன்னும் எவ்வளவோ சொல்லலாம் தான்! புரிந்தவர்களுக்கு நிச்சயம் புரியும், புரியாதவர்களுக்கு (புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு!) என்ன சொல்லியும் புரியப் போவதில்லை! அதனால், யாருக்கும் எந்த நட்டமும் இல்லை :)

*** 360 ***

12 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

பங்காளி... said...

கண்ணிருந்தும் குருடனாய்...
காதிருந்தும் செவிடனாய்...
அறிவிருந்தும் மடையனாய்...
வாழ்வதே சிறந்தது என நினைக்கிறீர்கள்...

அது உங்களின் உரிமை...

மதிக்கிறேன்...
வாழ்த்துக்கள்....

said...

இந்த மேன்மைகள் எல்லாம் இல்லாத ஒருவர் நம்மிடையே வாழ்கிறார் என்று சொல்ல வருகிறீர்களா பாலா?

பங்காளி... said...

என்னுடைய பின்னூட்டம்...எங்கே...எங்கே...எங்கே...எங்கேகேகேகே.....

(ஆடிக்கொன்னு அம்மாவசைக்கொன்னுன்னு பின்னூட்டம் போடறோம்...அதையும் பப்ளிஷ் பண்ணலைன்னா எப்படி....)

jeevagv said...

ஆம் பாலா!

ராமம் என்று என்று நினத்தாலே, தீய குணமும் அகலும். என்றும் சாந்தியும் அன்பும் நிலவும்!

-/சுடலை மாடன்/- said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

'இல்லை' என்று சொல்வதற்கு ஆதாரங்கள் தேவையில்லையாம். 'இருக்கு' என்று சொல்பவர்கள் தான் அதை நிருபிக்க வேண்டுமாம். ஒரு அல்லக்கை தத்துவத்தை உதிர்த்திருக்கிறது.

யோவ், வேண்டாம்யா. இதே டயலாக்க வெச்சு கருணாநிதிகிட்ட கேள்வி கேட்டா அப்புறம் டி.என்.ஏ., டெஸ்ட் எல்லாம் எடுத்து மாட்டிக்குவாரு. சொல்லிட்டோம்.

அருண்மொழி said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

ராமரை நிந்தித்தும், முதல்வரை ஏசியும், வந்த மேற்கண்ட பின்னூட்டங்களை நீக்கியுள்ளேன் (எடிட் செய்து போட எனக்கு நேரமில்லை!) இப்பதிவு லைட்டாக எழுதப்பட்டது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதற்கு இத்தனை காட்டமான பின்னூட்டங்கள் தேவையில்லை! அதனால், சிலபல மறுமொழிகளை அனுமதிக்க முடியாத நிலையில் உள்ளேன்! மன்னிக்கவும்!

எ.அ.பாலா

said...

Tharuthalai has left a new comment on your post "360. விரும்பத் தக்கவரா இராமர் ?":

//இன்னும் எவ்வளவோ சொல்லலாம் தான்! புரிந்தவர்களுக்கு நிச்சயம் புரியும், புரியாதவர்களுக்கு (புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு!) என்ன சொல்லியும் புரியப் போவதில்லை! அதனால், யாருக்கும் எந்த நட்டமும் இல்லை :)//

மேற்சொன்னபடி இருப்பதால் உங்களுக்கு நட்டம் இல்லாமல் இருக்கலாம். வெறும் மணல் திட்ட காட்டி **** EDITED ******அதனால இடிகாதேன்னு சொன்னா நிறைய பேருக்கு நட்டம். அக்கறை இருந்தால் இயற்கை சூழல், திட்டத்தின் நோக்கம் போன்றவற்றை முன்வைத்து போராட வேண்டும். இந்த பண்டாரங்களை நாட்டில் உலவ விடுவதே கேவலம்.

கோடிக்ரையில் ராமர் பாதம் என்று ஒன்று இருக்கிறது. அதன் நிலை என்ன என்று இந்த கூச்சலிடும் பண்டாரம் எவனுக்காவது தெரியுமா?
------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Posted by Tharuthalai to தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா at 11:59 AM, September 24, 2007

enRenRum-anbudan.BALA said...

அனானி1,
//இந்த மேன்மைகள் எல்லாம் இல்லாத ஒருவர் நம்மிடையே வாழ்கிறார் என்று சொல்ல வருகிறீர்களா பாலா?
//
நான் எதுவும் சொல்ல வரவில்லை, அனானி நண்பா ;-) உங்கள் புரிதல் குறித்து நான் கருத்து கூறும் நிலையில் இல்லை :)

பங்காளி, ஜீவா, அனானி3, தறுதலை,
வருகைக்கு நன்றி!

சுடலைமாடன், அருண்மொழி, அனானி2,
பின்னூட்டத்தை நீக்கியதற்கு மன்னிக்கவும்.

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails